நிர்வாக சபை கூட்ட அறிக்கை.
கடந்த 20.01.2013 மாலை 3.00 மணியளவில் தலைவர் திரு.விசுவலிங்கம் தலைமையில் இறைவணக்கத்துடன்
இனிதேஆரம்பமானது. தொடர்ந்து செயலாளரால் கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு சாரி என
ஏற்றுக்கொள்ளப்படட்து.
1. பின்பு ஆசாரி ஆலயத்துக்கு
வரவளைக்கப்பட்டு ஆலய புனர்நிர்மானத்துக்கு தேவையான தொகை என்பன உத்தேச மதிப்பீடு
ஆசாரியால் வழங்கப்பட அதை ஏற்றுக்கொண்டனர்
2. பற்றுச்சீட்டு, கடிதத்தலைப்பு, மகாசபை அங்கத்துவ
படிவம், கொடுப்பணவூ சீட்டு என்பன முற்றுமுழுதாக “அல்வாய் மேற்கு தேவரையாளி
கண்ணகை அம்மன் திருப்பணி பரிபாலனசபை என்ற பெயர்
மாற்றத்துடன்
உபவிதிகளின் பிரகாரம் பதிவூ செய்ய முடிவூ எடுக்கப்பட்டது.
3. வர்த்தக வங்கி நெல்லியடி கிளையில் உள்ள 8108031786 என்ற இலக்கத்தில்
உள்ள சேமிப்பு கணக்கினை முழுமையாக 20.01.2013அன்று பொறுப்பேற்ற
தலைவர் திரு சி.விசுவலிங்கம், பொருளாளர் திரு சி.சிவனேசன், செயலாளர் திரு செ.யோகேந்திரன்
என்பவர்களின் பெயர்களுக்கு மாற்றவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது
4. மேற்படி கூட்டத்தில் தலைவர், செயலாளர் , பொருளாளர், கொடுக்கல்
வாங்கல் தரப்படவில்லை. வங்கியிலுள்ள கணக்கு மிகுதி, உண்டியல் தொகை , 1917
ஆண்டு 9 ஆம் சட்டத்தின் பிரகாரம் மேற்கூறிய கோவிலும், கோவிலின் சொத்துக்களும்,
பொதுநம்பிக்கை சொத்துக்களும் மட்டுமே தரப்பட்டது.
அடுத்த கூட்டம் 27.01.2013 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட அவையினரால்
ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேற்படி கூட்டம் மாலை 6.30 மணியளவில் இனிதே
நிறைவேறியது.
Post a Comment